விரக்தி வடியும் முன்….

“கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்….” என்று ரகுமானின் இசைப்பின்னணியில் மனதைப் புதுப்பித்து ஒலிக்கும் ஓர் பாடலின் வரி… அவ்வரியின் கவனமெல்லாம், மனிதத்தை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவது தான்…. ஆம்…. நாம் அனுமானிக்க முடியாத ஒரு ஆதி தான் காதல் எனும் உணர்வு…. ஆனால், அவ்வுணர்வுக்கே அடிப்படையான சில உணர்வுகளை நாம் உளவியல் பாட ஒப்புவித்தலுடன் சுலபமாய் கடந்து விடுகிறோம்….. உளவியலின் படி மகிழ்ச்சி, பயம், அருவருப்பு, கோபம், துக்கம் ஆகிய ஐந்தும் முதன்மையான மனித உணர்வுகள்… “Inside Out” என்னும் ஓர் ஆங்கில animation திரைப்படம், இந்த அனைத்து உணர்வுகளின் பங்கீட்டு விளையாட்டுகளை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கும்…. நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உணர்ச்சி மேலாண்மை தான் அடிப்படை என்பதை 1 ½ மணி நேரத்தில் காட்டும் படம்…. ஆனால், கோபத்திற்கும் அருவருப்பிற்குமான பங்களிப்பை வில்லத்தனமாகவே சித்தரித்திருப்பது மனதை நெருடுகிறது… குறிப்பாக, கோபம் என்ற உணர்வு இல்லையேல், உலக வரலாற்றில் எந்த போராட்டமும் புரட்சியும் நிகழ்ந்திருக்காது… அடிமைத்தனத்தின் தளைகள் துருப்பிடித்து இறுகி இருக்கும்…. ஆனால், இறுதியில் துக்கத்தின் இன்றியமையாத பங்கை எடுத்துரைத்ததில் சிறந்துவிட்டது இப்படம்…. சோகம் என்பது பெரும்பாலும் எதிர்மறை உணர்வாகப் பார்க்கப்பட்டாலும், அதனுள் இருந்தே மகிழ்ச்சிக்கான மகிமையும் உண்மையான அர்த்தமும் ஒளியேற்றப்படுகிறது. சோகத்தின் நீர்மைக்குள் மூழ்கும் போது தான், கண்ணீர் மேலெழுந்து சிந்துகிறது…. கண்ணீரைக் கைப்பிடிக்கவும் வழியற்றவுடன், விரக்தி கண்ணீரின் வறட்சியின் மீது பரவுகிறது. அச்சமய தாகத்தில், யாரேனும் மெல்லிய புன்னகையுடன் ஒரு “Hello” சொன்னால்…?? வயிற்றில் பாலென்ன…. ஜிகர்தண்டாவே வார்த்தது போல் மனம் சில்லேன்றாகும்….!!!! “Hello”வைத் தொடர்ந்து, ஒரு மென்மையான மகிழ்ச்சியுடன் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஏதோ ஒரு நற்செய்தியின் இயல்பில் இருக்கும்… தோழமையுடன் பகிரப்படும் பேச்செல்லாம், நம்மை புகழ்வது போல் புளகாங்கிதம் அடைய வைக்கும்… உண்மையாகவே புகழ்ந்து விட்டாலோ, ராட்சத பலூன் ஒன்றில் தொங்கிக் கொண்டு வானிற்கும் பூமிக்கும் இடையே லேசாய் பயணிக்கும் உணர்வு தீண்டி, கொஞ்சம் காற்றடித்து நம் கேசத்தை வருடிக் கொடுக்கும்… அத்தகைய உணர்ச்சி சுரப்பில் தான், நம்முடைய அன்பும் பணிவும் மிக நேர்மையாய் வெளிப்படும்…. தொலைபேசியின் மூலம் இதற்கான தீர்வாய் ஒரு மனிதக் குரலும் செவியும் கிட்டினாலும் கூட, இயந்திரத்தன்மை தாண்டிய ஓர் மனிதக் கூறு மேலோங்கும்…. அன்பின் வழி பரவும் பகிர்தலும், மிக்க கண்ணியமாய் கடந்து போகும்….

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைப்பக்கத்தில் படித்த அவருடைய ஒரு அனுபவமே இதனை எழுதத் தூண்டியது. வெயிலோடு விளையாடியவர்களுக்கு குளிர் காலங்கள் எல்லாம் குத்தீட்டி போன்று குடைந்து கொண்டே இருக்கும்…. இந்த மல்லாங்கிணத்தானுக்கும் அத்தகைய ஒரு நிலை தான்… இதில், இரு கரங்களையும் காவு வாங்கும் சளி வேறு பிடித்துத் தொலைத்து, என்றென்றும் ரசிக்கும்படியான ரயில் பயணத்தைக் கூட களவாடப் பார்த்திருக்கிறது… நல்ல வேளையாய், விரக்தியின் விளிம்பு வரை உருக்கி வழிக்க Welding Machine போல வந்தார் “வெங்கட்” என்ற வாசகர்… எஸ்.ரா-வைக் கண்ட உற்சாகத்தில் அவர் பேசத் தொடங்க, உற்சாகம் இரட்டிப்பாகி நம் எழுத்தாளரை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல், “நன்றி வெங்கட்” என்ற தலைப்பில் ஓர் அனுபவக் கட்டுரைக்கும் வித்தெழுத்தாய் அமைந்திருக்கிறது… வாசகர்கள் இல்லாமல் தான் இல்லை என்பதை எழுத்தாளர்கள் உணர்ந்தே இருந்தாலும், ஒரு வாசகன் வழி ஒவ்வொரு வாசகனுக்கான தேடலைத் துவக்கி இருக்கிறது விரக்தியை உடைத்த உற்சாகம்…. வாசகரைப் பெரிதாய் மதிக்காத சில எழுத்தாளர்கள் கூட….. அல்லது பிறரை துச்சமாக நினைக்கும் எவரும் கூட, சோகத்தின் பிடியில் சிக்கி இருக்கையில், தன்னை மீட்கும் சிறு உயிருக்கும் மனதார மதிப்பளிக்கக் கற்றுக்கொள்கின்றனர்….

எனவே, உங்கள் சோகம் கரையும் முன்…. விரக்தி உடையும் முன்….. உங்கள் மதிப்பீட்டுப் பட்டியலில், கீழ் தளத்தில் இருக்கும் அதிகபட்ச நபர்களிடம் உரையாடி விடுங்கள்… உறுதியாகட்டும் அந்த உறவுகள்…. J

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s